70 ஆவது தேசிய சுதந்திர தின வைபவத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் ஒத்திகையின் காரணமாக இன்று காலை 7 மணிமுதல் பிற்பகல் 12 மணி வரையில் கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதே போன்று நாளையும் வீதிகள் மூடப்படும். காலி வீதியில் காலி முக சுற்றுவட்டத்திலிருந்து என்.எஸ்.ஏ சுற்று வட்டம் வரையிலும் என்.எஸ்.ஏ சுற்று வட்டத்திலிருந்து லோடஸ் வீதி செரமிக் சந்தி வரையிலும் கோம்பனி வீதி ரயில் நிலையத்திற்கு அருகாமையிலிருந்து காலி சுற்றுவட்டம் வரையில் இன்று மூடப்பட்டிருந்தன.
No comments:
Post a Comment