2018 உலகளாவிய ஈர நில கொண்டாட்டங்களின் தேசிய நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (02) முற்பகல் பத்தரமுல்ல அபேகம வளாகத்தில் இடம்பெற்றது.
ஒவ்வொரு வருடமும் உலகில் ரம்சா உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட நாடுகள் பெப்ரவரி 02ஆம் திகதியை உலகளாவிய ஈர நிலங்கள் தினமாக கொண்டுகின்றன. இலங்கையிலும் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 02ஆம் திகதி ஈர நிலங்கள் தினம் கொண்டப்படுகின்றது.
ஈர நிலங்களினால் ஆற்றப்படும் சேவைகள் மற்றும் உயிரின பல்வகைக்மையை பாதுகாப்பதற்கான பங்களிப்பு என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு 1971ஆம் ஆண்டில் ஈரான் நாட்டின் ரம்சா நகரில் 60 உலக நாடுகளின் பங்களிப்புடன் இடம்பெற்ற சர்வதேச மாநாட்டின்போது ஈர நிலங்களை பாதுகாத்தல் தொடர்பான உடன்படிக்கை எட்டப்பட்டது. அது ஈர நிலங்களை பாதுகாப்பதற்கான ரம்சா உடன்படிக்கை என அறியப்படுகின்றது.
தற்போது சுமார் 169 நாடுகள் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதுடன், இலங்கை 1990ஆம் ஆண்டில் அதில் கைச்சாத்திட்டது. மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் வன சீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் என்பவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி ”பேண்தகு நகரங்களுக்கான ஈர நிலங்களை பாதுகாப்போம்” எனும் கருப்பொருளில் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தேவக வீரகோன் இங்கு விசேட விரிவுரையாற்றினார்.
2018 உலகளாவிய ஈர நிலங்கள் கொண்டாட்ட நிகழ்வுடன் இணைந்ததாக பல்கலைக்கழக மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்கலைக்கழகங்களிற்கிடையிலான புகைப்படப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு இதன்போது ஜனாதிபதி அவர்களால் பரிசுகள் வழங்கப்பட்டன.
அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க, வலுவாதார அபிவிருத்தி மற்றும் வன சீவராசிகள் அமைச்சின் செயலாளர் டக்ளஸ் நாணயக்கார உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment