வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளை தொழில் முயற்சியாளர்களாக்க ஜனாதிபதி ஆலோசனை - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 28, 2018

வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளை தொழில் முயற்சியாளர்களாக்க ஜனாதிபதி ஆலோசனை

வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளை தொழில் முயற்சியாளர்களாக மாற்றும் விசேட திட்டத்தை அமுலாக்குமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கினார். 

அரசியல் பேதமின்றி சகலருக்கும் நன்மைகள் கிடைக்க வேண்டும். எனவே திட்டத்தை அமுலாக்குகையில் கிராம உத்தியோகத்தர்களின் உதவியை பெற வேண்டுமென ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

அரச வங்கிகள் தொடர்பில் குறிப்பிடுகையில், கடன்களையோ, சேவைகளையோ பெறுவதற்காக வரும் மக்களுடன் சுமூகமாக பேசி அவர்களின் தேவைகளை திறம்பட நிறைவேற்ற வேண்டுமென்றும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

அரச வங்கிகள், தனியார் மயமாவதன் காரணங்களையும் ஜனாதிபதி விபரித்தார். சமூக பிரச்சினைகளை முறையாக இனங்காணாது இருப்பதும் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான கடன்களை போதியளவு வழங்காமல் இருப்பதும் பிரதான காரணங்கள் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இலங்கை வங்கி, மக்கள் வங்கி, அரச ஈட்டு முதலீட்டு வங்கி போன்றவை அடங்கலாக நிதி அமைச்சின் பொறுப்பில் இயங்கும் அரச வங்கிகள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்காக அமுலாக்கும் கடன் திட்டங்கள் பற்றியும் ஜனாதிபதி இதன்போது கேட்டறிந்து கொண்டார்.

No comments:

Post a Comment