உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அவசியம் ஏற்படுமாயின் துப்பாக்கி பிரயோகம் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 1, 2018

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அவசியம் ஏற்படுமாயின் துப்பாக்கி பிரயோகம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது, தண்டனை சட்டக் கோவையில் உள்ள, ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்தும் வரையில் துப்பாக்கிச் சூடு நடத்த முடியுமான சூழ் நிலைகள் ஏற்படுமாயின் அந்த சந்தர்ப்பத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். 

பொலிஸ் தலைமையகத்தின் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தில் இன்று விஷேட ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்தி, அங்கு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன் தேர்தல்கள் சட்ட திட்டங்களை எவ்வாறு அமுல் செய்வது என்பது குறித்த விஷேட கையேடு ஒன்றினையும், பொலிஸ் தலைமையகம் தயார் செய்துள்ளதாகவும் அதனை அடுத்து வரும் நாட்களில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment