மாத்தறையிலிருந்து கதிர்காமம் வரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற ரயில் தண்டவாள மேம்பாளத்தின் பணிகளுக்காக கொண்டுவரப்பட்டிருந்த கம்பிகள் ககனதுர சந்தியினருகில் உள்ள மேம்பாலத்திலிருந்து திருடிய குற்றச்சாட்டில் மூன்று சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ககனதுர பிரதேசத்தில் வசித்துவரும் 31, 34 மற்றும் 38 வயதுடையோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
மாத்தறையிலிருந்து கதிர்காமம் வரையில் புதிய ரயில் தண்டவாளப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. அதன்படி ககனதுர சந்தியில் தண்டவாள மேம்பாலம் ஒன்று நிர்மாணிக்கப்படுகின்றது. இந்த நிர்மாணப்பணிகளுக்காக கொண்டுவரப்பட்ட இரும்பு கம்பிகள் 30 திருட்டு செல்லப்பட்டுள்ளதாக இந்த நிர்மாண பணிகளுக்கு மற்றும் களஞ்சியசாலைக்கு பொறுப்பதிகாரியால் கடந்த மாதம் 30 ஆம் திகதி மாத்தறை பொலிஸில் முறைப்பாடொன்று செய்யப்பட்டிருந்தது.
அந்த முறைபாடின் அடிப்படையில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் மூவர் நேற்று 5 மணியளவில் மாத்தறை பொலிஸாரால் ககனதுர பிரதேசத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இவர்களை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
No comments:
Post a Comment