"ஐ.எஸ் தீவிரவாதம் முழுவதும் ஒடுக்கப்படும் வரை அமெரிக்கா தொடர்ந்து போராடும்" என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் பாராளுமன்றக்குழு கூட்டத்தில் நேற்று அதிபர் ட்ரம்ப் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ட்ரம்ப் மேலும் தனது உரையில்,
"அமெரிக்காவை இதை விடச் சிறந்த நாடாக மாற்ற வேண்டும். அதற்குக் கருத்து வேறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும். அதேபோல் உலக நாடுகளின் மத்தியிலும் அமெரிக்கா தலைசிறந்து விளங்கும்.
ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாதம் 100% ஒழிந்துள்ளது. ஆனால் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். பயங்கரவாதம் உலக நாடுகளில் முற்றிலுமாக ஒழியும் வரை அமெரிக்கா தொடர்ந்து போராடும்.
அதேபோன்று அமெரிக்காவில் மெரிட் அடிப்படையில் இந்தியர்களுக்கு விசா வழங்கப்படும். திறமை வாய்ந்தவர்களுக்கு அமெரிக்காவில் இடமளிக்கப்படும். இதன்மூலமாக அமெரிக்காவில் திறன்மிக்க ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும்" என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment