வெள்ளவத்தைப் பகுதியில் மர்மமான முறையில் இறந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று 8.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள கடற்கரையிலிருந்தே குறித்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சுமார் 25 முதல் 35 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகவும் கொலையா அல்லது தற்கொலைய என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் சடலத்தை அடையாளங்காண பொதுமக்கள் உதவுமாறும் வெள்ளவத்தைப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment