வட ஜப்பானில் வயோதிபர்களுக்கு ஆதரவளிக்கும் பொதுநல மையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும் தீயணைப்பு வீரர்கள் இன்று காலையும் சம்பவ இடத்தில் சோதனை நடத்தி வருவதாகவும் ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பானின் சப்போரா நகரில் அமைந்துள்ள குறித்த மையம் மரத்தினால் வடிவமைக்கப்பட்ட மூன்று தளங்களை கொண்டதாகவும் இங்கு 16 வயோதிபர்கள் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தீ விபத்தில் காயமடைந்த 50 க்கும் 80 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
குறித்த வயோதிபர்களுக்கு ஆதரவளிக்கும் பொதுநல மையம் உள்ளூர் பாதுகாப்பு விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment