வருகிற 2020-ம் ஆண்டில் நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான பணியை டொனால்டு டிரம்ப் தொடங்கி விட்டார். அதற்கு முன்னோடியாக இப்போதே பிராட் பர்சேல் என்பவரை பிரசார மேலாளராக நியமித்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தது. அதில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று அதிபரானார்.
அவர் பதவி ஏற்று ஒரு ஆண்டு காலம் மட்டுமே தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் அடுத்ததாக வருகிற 2020-ம் ஆண்டில் நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான பணியை தொடங்கி விட்டார். அதற்கு முன்னோடியாக இப்போதே பிராட் பர்சேல் (42) என்பவரை பிரசார மேலாளராக நியமித்துள்ளார். இவர் டிஜிட்டல் நிபுணர் ஆவார்.
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் இவரே டொனால்டு டிரம்பின் பிரசார மேலாளராக இருந்தார். டிரம்பின் மருமகனும், அதிபரின் ஆலோசகருமான ஜார் குஷ்ணர் தலைமையிலான குழு பிரசாரம் மேற்கொண்டது. தற்போது பிரசார மேலாளராக பிராட் நியமிக்கப்பட்டதன் மூலம் வருகிற 2020-ம் ஆண்டில் நடைபெறும் அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.
No comments:
Post a Comment