தீவிரவாதத்திற்கு எதிராக தேவையான நடவடிக்கையை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி கடந்த மாதத்தில் பாகிஸ்தானுக்கு அளித்துவந்த ரூ.1.2 லட்சம் கோடி பாதுகாப்பு உதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
தீவிரவாதத்திற்கு துணைபோகும் நாடுகள் அமெரிக்காவின் நண்பனாக நீடிக்க முடியாது என்பதை தன்னுடைய நட்பு நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப் தெளிவாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு அளித்துவந்த பாதுகாப்பு உதவியை அதிபர் நிறுத்தியுள்ளார். இதன்மூலம், அமெரிக்காவின் நட்பு நாடுகள் தீவிரவாதத்தை எதிர்க்கும் முயற்சியில் முழுமையாக கைகோர்க்க வேண்டும் என்ற செய்தியை அவர் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் தீவிரவாத அமைப்புகளை அழிக்க அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. தெற்கு ஆசிய கோட்பாடின்படி தீவிரவாதிகளின் புகலிடமாக விளங்கும் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் நிலையை மாற்ற ராணுவத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்யவும் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment