பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் மூத்த அமைச்சர் மிர் ஹசர் கான் பிஜாரனி (71). இவரது மனைவி பரிகா ரசாக். முன்னாள் எம்எல்ஏ. ராணுவ வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் அமைச்சரும், அவரது மனைவியும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.உட்புறமாக பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை அமைச்சரின் மகனும், வீட்டு வேலைக்காரர்களும் சேர்ந்து உடைத்து திறந்துள்ளனர்.
அங்கு, அமைச்சர் பிஜாரனி உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்தது. மனைவியின் உடலில் 3 குண்டுகள் துளைத்திருந்தன. பிரேத பரிசோதனை அறிக்கையில், அமைச்சர் பிஜாரனி முதலில் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, பின்னர் அதே துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, குடியிருப்பின் காவலாளிகள், பாதுகாப்பு போலீசார் உட்பட 6 பேரிடம் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனால் கடந்த சில நாட்களாக தம்பதியினர் தொடர்ச்சியாக சண்டை போட்டு வந்ததாக வீட்டு வேலையாட்கள் கூறி உள்ளனர். இந்த சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment