இன்றைய காலநிலை - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 28, 2018

இன்றைய காலநிலை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை,மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ஓரளவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏனைய பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

காலியிலிருந்து கொழும்பு ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பகுதிகளின் பல இடங்களில் மாலை அல்லது இரவுவேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கடற்பகுதிகளில் காற்று மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வேகத்தில் வடகிழக்கு திசையில் வீசும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகமானது சடுதியாக (மணித்தியாலத்துக்கு 70 - 80 கிலோமீற்றர்வரை) அதிகரித்து வீசக்கூடும்.

முல்லைத்தீவிலிருந்து மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் குறைந்த மற்றும் ஆழம் கூடிய கடற்பரப்புகளில் ஓரளவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இடிமின்னலிலிருந்து ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

No comments:

Post a Comment