கம்­ப­ஹாவில் 800 டெங்கு நோயா­ளர்கள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 28, 2018

கம்­ப­ஹாவில் 800 டெங்கு நோயா­ளர்கள்

கம்­பஹா மாவட்­டத்தில், ஜன­வரி மாதம் முதல் பெப்­ர­வரி மாதம் 28 ஆம் திகதி வரை­யி­லான காலப்­ப­கு­திக்குள், டெங்கு தொற்று நோய் தொடர்பில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வு­களின் பிர­காரம், இது­வரை 800 டெங்கு நோயா­ளர்கள் பதி­வா­கி­யுள்ள நிலையில், இதில் ஒருவர் மர­ணித்­துள்­ள­தா­கவும், கம்­பஹா மாவட்ட தொற்று நோய்ப்­பி­ரிவின் விசேட வைத்­தியர் எஸ். ஆர். ரண­சிங்க தெரி­வித்­துள்ளார்.

நீர்­கொ­ழும்பு, அத்­த­ன­கலை, தொம்பே, களனி ஆகிய பிரதேசங்களிலேயே ஆகக்­கூ­டு­த­லான டெங்கு நோயா­ளர்கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர். தற்­போது மழை­காலம் ஆரம்பமாகியுள்ளது. 

இந்­நி­லையில், டெங்கு தொற்று நோய் மேலும் பரவி, பேரா­பத்தை விளை­விக்­கக்­கூடும் என்­பதால், பொது­மக்கள் தமது வீடு மற்றும் சுற்றுச் சூழல் என்­ப­வற்றில் அக்­கறை கொண்டு, எந்­நே­ரமும் சுத்தமாக வைத்திருப்பதற்கு முன்வர வேண்டும் என்றும் வைத்தியர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment