காத்தான்குடியைச் சேர்ந்த மார்க்க அறிஞர் கலாநிதி அஷ்ரபுக்கு சஊதி அரேபியாவில் பேராசிரியர் பதவி வழங்கி கௌரவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 28, 2018

காத்தான்குடியைச் சேர்ந்த மார்க்க அறிஞர் கலாநிதி அஷ்ரபுக்கு சஊதி அரேபியாவில் பேராசிரியர் பதவி வழங்கி கௌரவிப்பு

காத்தான்குடியைச் சேர்ந்த மார்க்க அறிஞர் கலாநிதி அஷ்ரப் அவர்களுக்கு சஊதி அரேபியாவில் பேராசிரியர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கு சஊதி அரேபியாவில் வழங்கப்பட்ட முதல் பேராசிரியர் பதவி இதுவாகும் என தெரிய வருகின்றது.

இலங்கை வரலாற்றில் ஹதீஸ் துறையில் முதல் 'கலாநிதி' பட்டம் பெற்ற இஸ்லாமிய மார்க்க அறிஞரான காத்தான்குடியைச் சேர்ந்த யு.எல். அஹமத் அஷ்ரப் அவர்களுக்கு (28.02.2018) புதன்கிழமை சஊதி அரேபியாவிலுள்ள நஜ்ரான் பல்கலை கழகத்தில் இந்த பேராசிரியர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை ஸர்க்கியா அறபுக்கல்லூரியில் கல்வி கற்ற கலாநிதி அஷ்ரப் சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அறபுக்க கல்லூரியில் சிறிது காலம் விரிவுரையாளராக கடமையாற்றினார். பின்னர் எகிப்து நாட்டின் அல் அஸ்ஹர் பல் கலைக் கழகத்தில் உயர் கல்வியை கற்றதுடன் அங்கு ஹதீஸ் துறையில் முதல் கலாநிதி பட்டத்தையும் பெற்றார்.

இதன் பின்னர் இவர் சஊதி அரேபியாவிலுள்ள நஜ்ரான் பல்கலைக் கழகத்தில் உதவி பேராசிரியராக கடந்த ஒரு சில வருடங்களாக கடமையாற்றி வந்த நிலையிலேயே இவருக்கு இந்த பேராசிரியர் எனும் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஹதீஸ்துறையில் ஆய்வாளரான இவர் தாறுல் ஹதீஸ் எனும் நிறுவனத்தை இலங்கையில் நிறுவி அதனூடாக இஸ்லாமிய மாக்கப்பிரச்சார பணிகளையும் மேற்கொண்டு வருகின்றார். சிறந்த மார்க்க பேச்சாளரான இவரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவருடைய இல்லத்தில் வைத்து ஊடகமொன்றுக்கு எனக்கு நேர்காணல் செய்ய கிடைத்தது.

அப்போது அவருடைய ஆதரிப்பும் உபசரிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. அவருடைய நல்ல பண்பான குண அம்சங்களையும் காணக் கிடைத்தது. அவருக்கு கிடைத்த இந்த கௌரவமானது காத்தான்குடி மக்களுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் கிடைத்த மிகப் பெரிய கௌரமாகும்.

எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஊடகவியலாளர்

No comments:

Post a Comment