மட்டக்களப்பு மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சியினூடாக முஸ்லிம் பெண்ணொருவரை உறுப்பினராக நியமிக்கவும் இணைப்பாளர் சாபி வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 28, 2018

மட்டக்களப்பு மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சியினூடாக முஸ்லிம் பெண்ணொருவரை உறுப்பினராக நியமிக்கவும் இணைப்பாளர் சாபி வேண்டுகோள்

மட்டக்களப்பு மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சியினூடாக முஸ்லிம் பெண்ணொருவரை உறுப்பினராக நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.எஸ்.சாபி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் இணைப்பாளர்களுக்கான கூட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறீகொத்தாவில் செவ்வாய்க்கிழமை (27.2.2018) நடைபெற்ற போதே இணைப்பாளர் சாபி மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளரும், அமைச்சருமான கபீர் காசீம் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது உள்ளுராட்சி மன்றங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்துள்ள மேலதிக ஆசனங்களுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வது தொடர்பாக ஆராயப்பட்டது.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்துள்ள 4 மேலதிக ஆசனங்களுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இந்த 4 உறுப்பினர்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபை வேட்பாளர் பட்டியலில் மேலதிக வேட்பாளர் பட்டியலிலுள்ள முஸ்லிம் பெண்ணொருவரையும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினராக நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.எஸ்.சாபி வேண்டுகோளையொன்றை விடுத்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த இணைப்பாளர் சாபி மட்டக்களப்பு மாநகர சபை பிரிவில் பல முஸ்லிம் கிராமங்கள் உள்ளன. அவைகளை உள்ளடக்கியதாக முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு இந்த வாய்ப்பை ஐக்கிய தேசியக் கட்சி வழங்க வேண்டும். அதற்காக ஒரு பெண் உறுப்பினரை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இல்லையேல் மட்டக்களப்பு மாநகர சபை பிரிவிலுள்ள முஸ்லிம் கிராமங்களை உள்ளடக்கியதான ஒரு தனியான பிரதேச சபையை உருவாக்கி தர வேண்டும் என்பதையும் கோரிக்கையாக விடுக்கின்றேன் என்றார்.

இதையடுத்து இது தொடர்பில் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கபீர் காசீர் தெரிவித்ததாக இணைப்பாளர் சாபி மேலும் குறிப்பிட்டார்.

எம்.எஸ்.எம்.நூர்தீன்

No comments:

Post a Comment