கொக்கலவில் அமெரிக்கா, அவுஸ்ரேலியா , சிங்கப்பூர் முதலீட்டாளர்களின் 600 மில்லியன் ரூபா வீடமைப்பு திட்டம் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 1, 2018

கொக்கலவில் அமெரிக்கா, அவுஸ்ரேலியா , சிங்கப்பூர் முதலீட்டாளர்களின் 600 மில்லியன் ரூபா வீடமைப்பு திட்டம்

இலங்கையில் நீண்டகாலத்திற்கு தங்கியிருக்கவரும் வெளிநாட்டவரின் வசதிக்காக வீடமைப்பு திட்டமொன்று கொக்கல பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளது. இதனை கிறனைற் கப்பிட்டல் நிறுவனம் 600 மில்லியன் ரூபா முதலீட்டில் வீடமைப்பு திட்டமொன்றை கொக்கலவில் மேற்கொள்ளவுள்ளது.

இந்த திட்டத்தில் 55 சதவீதம் இலங்கையர்களை கொண்டதாகவும் 45 சதவீத முதலீடு அமெரிக்கா, அவுஸ்ரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்வர் என்று கத்தலீனா முகாமைத்துவ பணிப்பாளர் ஜீவன் வில்லியம் தெரிவித்துள்ளார்.

இந்த வீடமைப்பு திட்டத்திற்காக ஐந்தரை ஏக்கர் காணி ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் மாதிரி வீடமைப்பு திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதற்கான திட்டம் இந்த வருடம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏனைய திட்டம் 2019ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும்.

சிரேஷ்ட பிரஜைகளை இலக்காகக்கொண்டு இது ஆரம்பிக்கப்படுவதும் இது தொடர்பில் அமெரிக்கா அவுஸ்ரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ளவர்கள் விபரங்களை கேட்டுத்தெரிந்து கொள்கின்றனர்.

No comments:

Post a Comment