நாச்சியா தீவில் இருந்து 10,000 ஏக்கர் அடி நீரை விடுவித்து தருமாறு ஜனாதிபதிக்கு கோரிக்கை கடிதம் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 3, 2018

நாச்சியா தீவில் இருந்து 10,000 ஏக்கர் அடி நீரை விடுவித்து தருமாறு ஜனாதிபதிக்கு கோரிக்கை கடிதம்

நாச்சியா தீவில் இருந்து 10,000 ஏக்கர் அடி நீரை விடுவித்து தருமாறு கோரி கட்டுக்கரை குள திட்ட முகாமைத்துவக்குழு சார்பாக 10 வாய்க்கால் அமைப்புக்கள் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமது கோரிக்கை அடங்கிய கடிதத்தினை கட்டுக்கரை குள திட்ட முகாமைத்துவக்குழு சார்பாக 10 வாய்க்கால் அமைப்புக்கள் இணைந்து கையொப்பமிட்டு நேற்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துளள்னர். குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில், 

"கட்டுக்கரை குளத்தின் கீழ் தற்போது 7,000 விவசாய குடும்பங்கள் சுமார் 30,000 ஏக்கர் விவசாயச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது 10 பிரதான வாய்க்காலுக்கு கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பயிர்களுக்கு நீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக அடைக்கல மோட்டை, பெரிய உடைப்பு, சின்ன உடைப்பு ஆகிய மூன்று வாய்க்காலுக்கு கீழ் சொற்ப அளவு நீரே பாயக்கூடிய நிலை உள்ளது. சுமார் 10000 ஏக்கர் பயிர்ச் செய்கைக்கு மட்டும் நீர் தற்போது பாய்ச்சக்கூடிய நிலை காணப்படுகின்றது.

மேலும் இசைமாளத்தாழ்வு, இரட்டைக்குளம், 14 ஆம் கட்டை, 13ஆம் கட்டை , 12ஆம் கட்டை, 11 ஆம் கட்டை, குருவில் ஆகிய 7 வாய்க்கால்களுக்கு கீழ் உள்ள 20,000 ஏக்கர் விவசாய செய்கைக்கு நீர் வழங்க முடியாத நிலை காணப்படுகின்றது.

தற்போது அருவி ஆற்றில் இருந்து நீர் வரத்து குறைவடைந்துள்ளது. எனவே 20,000 ஏக்கர் விவசாய செய்கை அழிவடைந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே 'நாச்சியா' தீவில் இருந்து 10,000 ஏக்கர் அடி நீரை விடுவித்து தருமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

குறித்த நீரை விடுவிப்பதன் மூலம் 20,000 ஏக்கர் விவசாய செய்கையை முழுமையாக காப்பாற்ற முடியும். மேலும் 7,000 விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரமும் பாதிப்பில் இருந்து மீட்கப்படும்." என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment