மட்டக்களப்பில் நேற்றிரவு (02) 8.00 மணியளவில் போதை மாத்திரை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் கதுருவெலயைச் சேர்ந்த 2௦ வயது மதிக்கத்தக்க இரு முஸ்லிம் இளைஞர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனையில் இருந்து கதுருவெல நோக்கிச் செல்லும்போது மட்டக்களப்பு அரச பேருந்து நிலையத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் விசாரணை ஆரம்பமாகியுள்ளது.
No comments:
Post a Comment