டில்லியில் இலங்கை வீரர்கள் நடந்து கொண்டவிதம் சரியானதே. - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 6, 2017

டில்லியில் இலங்கை வீரர்கள் நடந்து கொண்டவிதம் சரியானதே.

புதுடில்லியில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வீரர்கள் வளி மாசடைதலைக் காரணம் காட்டி போட்டியை இடைநிறுத்தியது சரியானதே என இந்திய வைத்திய நிபுணர் பிரசாந்த் சக்சேனா தெரிவித்துள்ளார்.

இந்தியத் தலைநகர வளிமண்டலம் பெரிதும் மாசுபட்டுள்ளது. குறிப்பாக கடந்த தினங்களாக மிகவும் மோசமான விதத்தில் வளி மாசுபட்டிருந்தது. இதன் காரணமாக இலங்கை வீரர்கள் மூக்கையும் வாயையும் மறைக்கும் மாஸ்க் அணிந்து விளையாடினார்கள். 

ஒரு கட்டத்தில் போட்டி இடை நிறுத்தப்பட்டது. இது பற்றி கருத்து வெளியிட்ட வைத்திய நிபுணர் பிரசாந்த் சக்சேனா...

இத்தகைய சூழலில் எவரும் விளையாட முடியாது. வளியில் பெரிதும் மாசுத் துகள்கள் இருந்தன. அதனை சுவாசிப்பதால் சிரமத்தையும், இருமலையும் ஏற்படுத்தும்.

இந்நிலையில் இலங்கை அணி வீரர்கள் நடந்துகொண்ட விதம் சரியானதே என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை வீரர்கள் உடல் உபாதைகளுக்கு உள்ளானதை இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment