ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களின் வேண்டுகோளின் பேரில் சீன அரசாங்கத்தின் நட்புறவின் அன்பளிப்பாக 12,000 மில்லியன் ரூபா செலவில் பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்படவுள்ள தேசிய சிறுநீரக மருத்துவமனைக்கு (06) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களினால் அடிக்கல் நாட்டப்பட்டது.
சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, பிரதி அமைச்சர் பைசல் காசிம், சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சுகததாச, சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க, பொலன்னறுவை பொது மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இந்திக்க சம்பத் குமார ஆகியோரும் இலங்கைக்கான சீன தூதுவர் யீ ஷியென்லியங் உள்ளிட்ட அதிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment