மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு : வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்த நீதிமன்றம் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 6, 2025

மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு : வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்த நீதிமன்றம்

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாண பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று (06) நிறைவடைந்தது.

இந்தக் குற்றச்சாட்டுக்காக குற்றவாளிகளாக காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சுவிஸ் குமார் உட்பட ஏனைய பிரதிவாதிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணையே இவ்வாறு நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, உயர் நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்து உத்தரவிட்டது.

பிரதம நீதியரசர் பிரித்தி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment