பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட யோஷித ராஜபக்க்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முன்னதான விசாரணைக்காக நவம்பர் 12ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டது.
இவ்வழக்கு இன்று மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, முறைப்பாடு தரப்பால் இவ்வழக்கு தொடர்பான சில ஆவணங்கள் பிரதிவாதிகள் தரப்பினரிடம் கையளிக்கப்பட்டது.
சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற் கொண்ட நீதிபதி, எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி முன்னதான விசாரணைக்காக அழைக்குமாறு உத்தரவிட்டார்.
சுமார் ரூ. 73 மில்லியன் பெறுமதியான சொத்துக்களை முறைக்கேடாக கையகப்படுத்தியதன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டி யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஆகியோர் மீது சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

No comments:
Post a Comment