வைரலாகி வரும் விஜய்யின் ‘ஜனநாயகன்’ புதிய போஸ்டர் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 8, 2025

வைரலாகி வரும் விஜய்யின் ‘ஜனநாயகன்’ புதிய போஸ்டர்

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் புதிய போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் மேனன், ப்ரியாமணி, நரேன், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தினை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். 

இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 09 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் நெரிசல் சம்பவம் காரணமாக இப்படம் குறித்த அறிவிப்பு எதையும் வெளியிடாமல் இருந்து வந்தது படக்குழு. இந்த நிலையில் விஜய் மீண்டும் அரசியல் களத்துக்கு வந்த நிலையில், தற்போது இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

அதில் விஜய் நடுவில் நிற்க அவரை சுற்றி நிற்கும் மக்கள் அனைவரும் அவர் நெஞ்சின் மீது கை வைத்திருக்கின்றனர். இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இப்படத்தின் முதல் பாடல் இன்று (08) மாலை 6.03 வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இது படத்தில் விஜய்யின் அறிமுகப் பாடலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment