அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு : மீண்டும் சரி பார்க்கும் நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Thursday, November 6, 2025

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு : மீண்டும் சரி பார்க்கும் நடவடிக்கை

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளின் முதலாம் கட்டத்தை மீண்டும் சரிபார்க்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 10 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்காக 2023 ஆம் ஆண்டில் பதிவு செய்த அனைத்து குடும்பங்கள் மற்றும் தனிநபர்களும் இதற்காக மீண்டும் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம். இணைய வழி மூலமும் இதற்காக விண்ணப்பிக்க முடியும். www.eservices.wbb.gov.lk என்ற இணையதளமூடாக விண்ணப்பங்களை அனுப்ப இயலுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்காகன விண்ணப்பத்தை கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திலிருந்து பெற்று, அதைப் பூர்த்தி செய்து, பிரதேச செயலகத்தில் சமர்ப்பிப்பதன் மூலமும் பதிவு செய்து கொள்ள முடியும்.

இது குறித்த மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு 1924 என்ற துரித தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

தேவையான தகவல்களை நலன்புரி சலுகைகள் பிரிவு, பொருளாதார மேம்பாட்டு அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலகத்தின் சமுர்த்தி மேம்பாட்டு அலுவலகம் ஆகியவற்றிலிருந்தும் பெற்றுக் கொள்ள முடியும்.

No comments:

Post a Comment