விசேட அதிரடிப் படையணிக்கு மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகளை கொள்வனவு அங்கீகாரம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 4, 2025

விசேட அதிரடிப் படையணிக்கு மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகளை கொள்வனவு அங்கீகாரம்

விசேட அதிரடிப் படையணிக்கு 100 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 50 முச்சக்கர மோட்டார் ஊர்திகளைக் கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (03) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அவ்வாறு 14 தீர்மானங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

விசேட அதிரடிப் படையின் கீழ் நாடளாவிய ரீதியில் 76 பிரதான முகாங்களும், 23 உப முகாங்களும் மற்றும் 14 விசேட பிரிவுகளும் செயற்பட்டு வருகின்றன.

குறித்த படையணிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைகளை மேற்கொள்வதற்கு தற்போதுள்ள 314 மோட்டார் சைகக்கிள்களில் 90% சதவீதமானவை 10 வருடங்களுக்கு மேல் பழையவையாக இருக்கின்றமையால் தொடர்ச்சியாக இயந்திரக் கோளாறுகள் ஏற்படுகின்றன.

இந்நிலைமையால் விசேட அதிரடிப் படையால் மேற்கொள்ளப்படுகின்ற விசேட சுற்றி வளைப்புக்களை சிறந்த முறையில் மேற்கொள்வதற்கு தடையாக அமைந்துள்ளன.

அதற்கமைய, போதைப் பொருள் தடுப்பு மற்றும் அமைப்பு ரீதியான பாதாள உலகக் குழுக்களை ஒழித்தல் போன்ற கடமைகளை வினைத்திறனாக மேற்கொள்வதற்கு இயலுமாகும் வகையில் விசேட அதிரடிப் படையணிக்கு 125 cc இயந்திரக் கொள்ளவுடைய 100 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 50 முச்சக்கர மோட்டார் ஊர்திகளைக் கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment