இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள மாவட்ட, பிரதேச செயலக கட்டட வேலைகளை பூர்த்தி செய்ய அங்கீகாரம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 4, 2025

இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள மாவட்ட, பிரதேச செயலக கட்டட வேலைகளை பூர்த்தி செய்ய அங்கீகாரம்

தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கட்டுமானங்கள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகக் கட்டடங்களின் கட்டுமானத் திட்டங்களின் வேலைகளைப் பூர்த்தி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (03) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அவ்வாறு 14 தீர்மானங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பொதுமக்களுக்கான சேவைகளை மிகவும் வினைத்திறனுடன் வழங்கும் நோக்கில் தாபிக்கப்பட்டுள்ள மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமைகளை மேற்கொள்வதற்காக போதியளவு இடவசதிகள் இன்மையால் மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுக்கான புதிய கட்டடங்கள் சில கடந்த வருடம் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அவற்றில், அந்தந்த மாவட்டச் செயலாளர்களின் செலவுத் தலைப்புக்களின் கீழ் வழங்கப்படுகின்ற வருடாந்த நிதியொதுக்கீட்டின் அடிப்படையில் பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 05 கருத்திட்டங்களும், போதியளவு நிதியுதவி கிடைக்காமையால் கட்டுமானங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ள 6 கருத்திட்டங்களும் காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் கட்டுமானத் துறையில் பொதுவாக ஏற்பட்டுள்ள தாக்கங்கள் காரணமாக அக்கட்டடங்களைக் குறித்த மதிப்பீட்டுச் செலவு அதிகரித்துள்ளமையால், அவற்றின் வேலைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தாமதமாகியுள்ளது.

அதற்கமைய, பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, வருடாந்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நிதியொதுக்கீட்டைப் பயன்படுத்தி கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு மொத்த செலவு மதிப்பீட்டைத் திருத்தம் செய்து, அவற்றின் கட்டுமானப் பணிகளை துரிதமாகப் பூர்த்தி செய்வதற்கும், கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ள கருத்திட்டங்களை அரச முதலீட்டுத் திட்டத்தில் உட்சேர்த்து தேவையான நிதியொதுக்கீடு செய்து நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment