(எம்.ஆர்.எம்.வசீம்)
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் பொது மக்களுக்கு மிகச்சிறந்த வினைத்திறன்மிக்க சேவைகளைப் பெற்றுக் கொள்வதனை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன் பிரகாரம் பொதுமக்கள் சேவை தினங்களாக வார நாட்களில் திங்கட்கிழமை மற்றும் புதன் கிழமைகளை பிரகடனப்படுத்தியுள்ளதுடன் அன்றையதினம் காலை 8 .30 மணி முதல் பிற்பகல் 4.15 மணி வரை மாத்திரம் திணைக்களத்திற்கு வருகை தருமாறு அறிவித்துள்ளது.
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் சேவைகளை பெற்றுக் கொள்ள வருகை தரும் பொதுமக்கள், அங்கு அசெளகரியங்களை எதிர்கொள்வதை தவிர்க்கும் நோக்கிலும் அவர்களுக்கு மிகச்சிறந்த வினைத்திறன்மிக்க சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையிலுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.jpg)
No comments:
Post a Comment