கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு இம்மாதம் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
தவிசாளராக செயற்பட்டு வந்த எம்.எச்.எம்.பைறூஸ் உறுப்புரிமை இழந்த வெற்றிடத்துக்கு நூர்தீன் பாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வறிதாகியுள்ள கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் எதிர்வரும் 2025.11.20ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை சபா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
2012ஆம் ஆண்டு 22ஆம் இலக்க உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 66 (C) அடிப்படையில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆதம் லெப்பை முஹம்மது அஸ்மியினால் இவ்வறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் 10 ஆம் திகதி வெளியாகியுள்ளது.


No comments:
Post a Comment