விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சாமவாயம் (திருத்தச்) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்.
விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சாமவாயம் (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு நேற்று (7) சான்றுரைப்படுத்தினார்.
நேற்று மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை நடைபெற்ற இரண்டாவது மதிப்பீடு விவாதத்தின் பின்னர் விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சாமவாயம் (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது.
குறித்த சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக 2025.09.12ஆம் திகதி இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த சட்டமூலம் இலங்கையின் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சட்டத்தை, சர்வதேச சட்டத்துடன் இற்றைப்படுத்துவதற்காக 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சாமவாயச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலமாகும்.
உலக ஊக்குப் பதார்த்தத் தடுப்பு முகவரமைப்பினால் இலங்கையின் விளையாட்டுக்களுடன் தொடர்புடைய தடைசெய்யப்பட்ட ஊக்குப் பதார்த்தம் தொடர்பான சட்டம் மற்றும் ஒழுங்குவிதிகள் வருடாந்தம் பரிசீலனை செய்யப்படுவதுடன், நவீன விளையாட்டுத் தேவைகளுக்கு அமைய உலக ஊக்குப் பதார்த்த தடுப்பு முகவரமைப்பின் சட்ட மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு அமைய நடைமுறையிலுள்ள சட்டத்தைத் திருத்துவது இதன் நோக்கமாகும்.
இதற்கு அமைய, விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சாமவாயம் (திருத்தச்) சட்டமூலம், 2025ஆம் ஆண்டு 21ஆம் இலக்க விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சாமவாயம் (திருத்தச்) சட்டமாக நடைமுறைக்கு வருகிறது.
No comments:
Post a Comment