இரசாயனவிலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 8, 2025

இரசாயனவிலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2025 ஆண்டுக்கான நோபல் பரிசுகள் யாருக்கு என்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.

2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று (08) இரசாயனவிலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை 3 பேருக்கு பகிர்ந்து வழங்க அறிவிப்பு வெளியானது.

ஸ்வீடனின் இன்று வெளியிட்ட அறிவிப்பில், இந்த ஆண்டுக்கான இரசாயனவியல் நோபல் பரிசு ஜப்பானைச் சேர்ந்த சுசுமு கிடகாவா (Susumu Kitagawa), அவுஸ்திரேலிய விஞ்ஞானி ரிச்சர்ட் ராப்சன் (Richard Robson) மற்றும் அமெரிக்க விஞ்ஞானி ஓமர் எம். யாகி (Omar M. Yaghi) ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மூவரும் உலோக - ஆர்கானிக் கட்டமைப்புகள் பற்றிய வளர்ச்சியில் அளித்த முக்கிய பங்களிப்பிற்காக இந்தப் பெருமையைப் பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment