கொலைக் குற்றத்திற்காக தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து ‘ஜூலம்பிட்டிய அமரே’ என்ற ஜி.ஜி. அமரசிறி தாக்கல் செய்த மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் இன்று (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரித்துள்ளது.
ஜூலம்பிட்டிய அமரேவுக்கு தங்காலை மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை உறுதி செய்து உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
2012 ஆம் ஆண்டு கட்டுவன பகுதியில் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டத்திற்குள் புகுந்து இருவரை சுட்டுக் கொலை செய்ததுடன், மற்றொருவரை படுகாயப்படுத்தியதற்காக தங்காலை மேல் நீதிமன்றம் பிரதிவாதிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.
No comments:
Post a Comment