வீடமைப்பு, நிர்மாணத்துறை, நீர் வழங்கல் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Monday, October 13, 2025

வீடமைப்பு, நிர்மாணத்துறை, நீர் வழங்கல் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளராக பொறியியலாளர் எல். குமுது லால் போகஹவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் கையளிக்கப்பட்டது.

இந்தப் புதிய நியமனம் வழங்கும்போது, ​​எல். குமுது லால் போகஹவத்த நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராகப் பணியாற்றி வந்தார்.

ஜனாதிபதியால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின்படி, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக வைத்தியர் எச்.எம். சுசில் ரணசிங்க நியமிக்கப்பட்டார். அதன்படி, இந்தப் புதிய நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment