உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) நாட்டை வந்தடைந்தார்.
டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கட்டார், டோஹாவிலிருந்து இன்றையதினம் காலை 9:40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் ஓய்வறையில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க அவரை வரவேற்றார்.
கொழும்பில் நடைபெறும் 78 வது தென்கிழக்கு ஆசிய பிராந்திய சுகாதார உச்சி மாநாட்டில் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பிரதம விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உச்சிமாநாடு 13 ஆம் திகதி முதல் 15 வரை கொழும்பில் நடைபெற உள்ளது.
தென்கிழக்கு ஆசிய பிராந்திய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுகாதார அமைச்சர்களும் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்க நாட்டுக்கு வருகை தரவுள்ளனர்.
No comments:
Post a Comment