(எப்.அய்னா)
2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னர் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வெளிநாட்டு உளவுத்துறையிடமிருந்து வந்ததாகக் கூறப்படும் தொலைபேசி அழைப்புகள் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன நேற்று (8) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) முன் ஆஜரானார்.
இதன்போது சஜின் குணவர்தன காலை 9:30 மணியளவில் சி.ஐ.டிக்கு வந்து சுமார் மூன்றரை மணி நேர விசாரணைக்குப் பிறகு வெளியேறினார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சஜித் குணவர்தன கூறியதாவது, “ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பாக வாக்குமூலம் அளிக்க சிஐடி என்னை அழைத்தனர்.
இலங்கை சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களாக, நாங்கள் அவருடன் நெருக்கமாக பணியாற்றினோம். எனவே அதன் அடிப்படையில் நான் ஒரு வாக்குமூலம் அளித்தேன், இப்போது நான் வெளியேறுகிறேன்.
தாக்குதல்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, மைத்ரிபால சிறிசேனவைத் தொடர்பு கொண்ட அனைத்து தொலைபேசி எண்களும் ஆய்வு செய்யப்படுகின்றன. அந்த எண்களில் ஒன்று நான் பயன்படுத்திய இந்திய எண் இதைச் சரிபார்க்க சி.ஐ.டி. என்னை அழைத்தது.” என்றார்.
No comments:
Post a Comment