நுகேகொடை பகுதியில் உள்ள விடுதியொன்றில் உள்ள நீச்சல் தடாகத்தில் மூழ்கி 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிறுவன் படித்து வந்த முன்பள்ளி பாடசாலையின் உப அதிபர் உட்பட ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த 8 ஆம் திகதி காலை மிரிஹான, ஸ்டென்லி மாவத்தையில் உள்ள விடுதியொன்றில் இடம்பெற்றுள்ளது.
அன்றையதினம் ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளரின் வழிகாட்டுதலின் கீழ் சிறுவர்கள் நீச்சல் தடாகத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது, சிறுவன் நீரில் மூழ்கியுள்ளார்.
நீச்சல் தடாகத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுவனின் பிரேத பரிசோதனை வியாழக்கிழமை (9) இடம்பெற்றதோடு, இந்த சம்பவம் தொடர்பாக முன்பள்ளி பாடசாலையின் உப அதிபர், விளையாட்டு ஒருங்கிணைப்பு அதிகாரி, இரண்டு ஆசிரியர்கள், ஆரம்ப பாடசாலையின் ஊழியர் மற்றும் இரண்டு நீச்சல் பயிற்றுனர்கள் உட்பட 7 பேர் மிரிஹான பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment