ரூ. 300,000 எட்டும் தங்கம் விலை : உலக சந்தையிலும் வரலாற்று உச்சம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 7, 2025

ரூ. 300,000 எட்டும் தங்கம் விலை : உலக சந்தையிலும் வரலாற்று உச்சம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 3,950 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளதாக சர்வதேச சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது நாட்டில் தங்கத்தின் விலை ரூ. 8,000 ரூபாய் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (07) தங்க விற்பனை நிலவரப்படி, கடந்த வௌ்ளிக்கிழமை ரூ. 283,000 ஆக விற்பனை செய்யப்பட்ட 22 கரட் பவுண் தங்கத்தின் விலை ரூ. 290,500 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், கடந்த வாரம் ரூ. 306,000 ஆக நிலவிய 24 கரட் பவுண் தங்கத்தின் விலை இன்று ரூ. 314,000 ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment