தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து இலங்கைக்கு வந்த 29 வயதுடைய இலங்கை பிரஜை ஒருவர், 2,523 கிராம் குஷ் போதைப் பொருளுடன் சுங்கத் திணைக்கள போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவு (NCU) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த .சந்தேகநபர் கொழும்பின் கிராண்ட்பாஸில் வசிப்பவராவார். இவர் இன்று (28) காலை 11.00 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL 403 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இதன்போது, சோதனையிட்ட அதிகாரிகள் சந்தேகநபர் தமது பயணப் பொதிக்குள் சூட்சுமமான முறையில் வடிவமைக்கப்பட்ட அடிப்பகுதிகளில் “குஷ்” போதைப் பொருட்களை மறைத்து வைத்திருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
உடடினடியாக குறித்த சந்தேகநபரை கைது செய்த, போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவு (NCU) அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சந்தேகநபர் போதைப் பொருளுடன் சேர்ந்து, சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் (PNB) ஒப்படைக்கப்படுவார் எனவும் தெரிவித்தனர்.
.jpg)
No comments:
Post a Comment