அரச சேவையில் ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாம் முகாமைத்துவத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று (27) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு 12 தீர்மானங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரச சேவையில் ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்து தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் நேரச் சட்டகத்தை அடையாளங் கண்டு, அதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளரின் தலைமையில் உத்தியோகத்தர் குழுவொன்றை நியமிப்பதற்காக 2024.12.30 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவுக்கு அந்தந்த அமைச்சுக்களில் குறித்த அமைச்சின் கீழ் இயங்குகின்ற திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் நிலவுகின்ற பதவி வெற்றிடங்களைப் நிரப்புவதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, 2025.10.02 அன்று இடம்பெற்ற குறித்த குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள விதந்துரைகளின் அடிப்படையில் கீழ்வரும் ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்காக அந்தந்த அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஆட்சேர்ப்புக்கு குழுவால் விதந்துரைக்கப்பட்டுள்ள பதவி வெற்றிடங்களின் எண்ணிக்கை
01. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு - 79
02. சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு - 120
03. துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு - 44
04. பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு - 17
05. விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு - 123
06. வர்த்தக, வாணிப,உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சு - 01
07. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு - 310
08. மீன்பிடி, நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சு - 01
09. டிஜிட்டல் பொருளாதார அமைச்சு - 01
10. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு - 48
11. வெளி விவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு - 54
12. கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மறும் சமுதாய உட்கட்டமைப்பு அமைச்சு - 06
13. இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சு - 355
14. பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு - 5,198
15. பெருந்தோட்ட மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு - 213
16. புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சு - 1,261
17. தேசிய பொலிஸ் ஆணைக்குழு - 02
18. வடக்கு மாகாண சபை - 115
19. சப்ரகமுவ மாகாண சபை - 11
20. வடமேல் மாகாண சபை - 85
21. வடமத்திய மாகாண சபை - 89
22. மேல் மாகாண சபை - 414
மொத்தம் - 8,547
.jpg)
No comments:
Post a Comment