தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்த) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர் - News View

About Us

About Us

Breaking

Friday, October 31, 2025

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்த) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்த) சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்.

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்த) சட்டமூலத்தை சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன 2025.10.30 அன்று சான்றுரைப்படுத்தினார்.

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்த) சட்டமூலம் 2025.10.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் மூன்றாவது மதிப்பீடு செய்யப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டமூலம் 2022 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்தை திருத்துவதற்கான ஒரு சட்டமூலமாகும். 2025 மார்ச் 27 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, 2025 மே 08 ஆம் திகதி டிஜிட்டல் பொருளாதார அமைச்சரினால் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட இந்த திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக முதன்மைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, இந்த சட்டமூலத்தின் ஊடாக முதன்மைச் சட்டவாக்கத்தின் 1, 12, 17, 18, 19, 20, 24, 25, 52, 53, 56 ஆம் பிரிவுகள் மற்றும் VI ஆம் அட்டவணை திருத்தப்படுவதுடன், 26 ஆம் பிரிவு மாற்றீடு செய்யப்படுவதுடன், முதன்மைச் சட்டவாக்கத்துக்கு 51அ எனும் புதிய பிரிவு உட்புகுத்தப்படுகின்றது.

எதிர்காலத்தில் தரவுகள் தொடர்பில் ஏற்படும் நிலைமைகளுக்கு தயாராவதுடன், அதிகாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நிறுவனமொன்று இருப்பதன் முக்கியத்துவத்தை இனங்கண்டு, அரச மற்றும் தனியார் ஆகிய இரு தரப்புக்கும் டிஜிட்டல் மூலோபாயத்தை பின்பற்றுவதற்கு சமமாக ஆதரவளிப்பதற்கும், தரவு விடயப்பரப்பின் உரிமைகள் தொடர்பில் அர்த்தமுள்ளவகையில் செயற்படுவதற்கும் இந்தச் சட்டம் உதவும்.

அதற்கமைய, தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்த) சட்டமூலம், 2025 ஆம் ஆண்டும் 22 ஆம் இலக்க தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்த) சட்டமாக நடைமுறைக்கு வரும்.

No comments:

Post a Comment