இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் சொத்து விபரங்கள் அறிவிப்பு : ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், எம்.பிக்கள் விபரங்கள் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, September 18, 2025

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் சொத்து விபரங்கள் அறிவிப்பு : ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், எம்.பிக்கள் விபரங்கள் கையளிப்பு

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி 2025 ஆம் ஆண்டுக்கான சொத்து விபரங்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சமர்ப்பிக்கவில்லை.

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு மேற்படி தகவல்களை வெளியிட்டதையடுத்து அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதியமைச்சர் சுனில் வட்டகல ஆகியோரின் சொத்துகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் எதிர்மறையான கருத்துகளை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

குறிப்பாக அவர்கள் இருவரினதும் சொத்துக்கள் தொடர்பில் அரசியல் மட்டத்திலும் மக்கள் மத்தியிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

2023 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் பிரகாரம் அரசியல்வாதிகள் தமது சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்த வேண்டும். இந்த விபரங்களை இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தனது உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு வெளியிட்டுள்ள சொத்து விவரங்களின்படி,

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
காணி மற்றும் வீடுகள் - 40,000,000 ரூபா
தங்க நகைகள் – 1,125,000 ரூபா
வாகனங்கள் - 15,000,000 ரூபா
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் - 1,377,435 ரூபா
மொத்த சொத்து மதிப்பு - 57,502,435 ரூபா.

பிரதமர் ஹரிணி அமரசூரிய
காணி மற்றும் வீடுகள் - 10,555,615 ரூபா
தங்க நகைகள் - 7,000,000 ரூபா
முதலீடுகள் - 6,842,604 ரூபா
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் - 4,082,302 ரூபா
மொத்த சொத்து மதிப்பு - 27,000,000 ரூபா

அமைச்சர் பிமல் ரத்நாயக்க
காணி மற்றும் வீடுகள் - 6,000,000 ரூபா
தங்கநகைகள் - 1,310,000 ரூபா
வாகனங்கள் - 15,000,000 ரூபா
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் - 2,745,794 ரூபா
மொத்த சொத்து மதிப்பு - 25,000,000 ரூபா.

அமைச்சர் விஜித ஹேரத்
காணி மற்றும் வீடுகள் - 10,007,000 ரூபா
வாகனங்கள் - 27,000,000 ரூபா
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் - 575,276 ரூபா
மொத்த சொத்து மதிப்பு - 37,582,276 ரூபா

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
காணி மற்றும் வீடுகள் - 55,000,000 ரூபா
தங்கநகைகள் - 3,100,000 ரூபா
வாகனங்கள் - 21,300,000 ரூபா
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் - 4,768,750 ரூபா
மொத்த சொத்து மதிப்பு - 84,168,750 ரூபா

அமைச்சர் வசந்த சமரசிங்க
வணிக கட்டடங்கள் - 235,000,000 ரூபா.
காணி மற்றும் வீடுகள் - 10,000,000 ரூபா.
சூரிய மின்கல கட்டமைப்பு - 6,500,000 ரூபா
தங்கநகைகள் - 4,550,000 ரூபா
வாகனங்கள் - 15,000,000 ரூபா
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் - 3,153,850 ரூபா
LOLC பங்குகள் - 21,000 ரூபா
வருடாந்த வருமானம் - 15,300,000 ரூபா
டிஜிட்டல் பணம் - 3,000 அமெரிக்க டொலர்

பிரதியமைச்சர் சுனில் வட்டகல
காணி மற்றும் வீடுகள் - 76,000,000 ரூபா
வருடாந்த வருமானம் - 9,678,185 ரூபா
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் - 21,933,367 ரூபா.

நாமல் ராஜபக்‌ஷ எம்.பி
காணி மற்றும் வீடுகள் - 5,500,000 ரூபா. (மேலும் சில இடங்களின் பெறுமதி குறிப்பிடப்படவில்லை)
வாகனங்கள் - பெறுமதி குறிப்பிடப்படவில்லை
முதலீடுகள் - 39,000,000 ரூபா
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் - 124,000,000 ரூபா
மொத்த சொத்து மதிப்பு - 168,500,500 ரூபா

ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி
காணி மற்றும் வீடுகள் - 268,000,000 ரூபா
வாகனங்கள் - 22,000,000 ரூபா
தங்க நகைகள் - 14,000,000 ரூபா
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் - 7,500,000 ரூபா
மொத்த சொத்து மதிப்பு - 311,500,000 ரூபா

ஹர்ஷ டி சில்வா எம்.பி
காணி மற்றும் வீடுகள் - 662,000,000 ரூபா
வாகனங்கள் - 129,200,000 ரூபா
முதலீடுகள் - பெறுமதி குறிப்பிடப்படவில்லை
மொத்த சொத்து மதிப்பு - 141,941 அமெரிக்க டொலர்

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச
2025 ஆம் ஆண்டுக்கான சொத்து விபரங்களை சமர்ப்பிக்கவில்லை 

No comments:

Post a Comment