இலங்கை கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகே தனது தந்தையின் மறைவைத் தொடர்ந்து, இன்று (19) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இலங்கை கிரிக்கெட் வீரர் துனித் வெல்லலகே தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளுவதற்காக இன்று வெள்ளிக்கிழமை (19) காலை நாட்டுக்கு வருகை தந்துள்ளார்.
துனித் வெல்லலகே இன்று காலை 08.25 மணிக்கு எதிஹாட் ஏர்வேஸ் EY-392 விமானத்தில் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
துனித் வெல்லலகேயுடன் இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரி ஒருவரும் வந்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேயின் தந்தை சுரங்க வெல்லாலகே தனது 54 வயதில் திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார்.
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இளம் கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேவின் தந்தையின் திடீர் மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள பல கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
துனித் வெல்லாலகேவின் தந்தை திடீர் மாரடைப்பால் நேற்று (18) இரவு உயிரிழந்த அதேநேரம், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் துனித் விளையாடிக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment