இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்றுவதை புறக்கணித்து ஐ.நா சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஐரோப்பிய யூனியன் நாடுகளின் வான் வெளியை தவிர்த்து மத்திய தரைக்கடல் வழியே அமெரிக்காவுக்கு விமானத்தில் சென்றுள்ளார். காசாவில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக பிடியாணை அமுலில் இருப்பதால் கைதாவதில் இருந்து தப்பிக்க, நெதன்யாகு விமானம் புதிய வழித்தடத்தில் பறந்துள்ளது.
தங்கள் நாட்டிற்கு நெதன்யாகு வந்தால் அவரை கைது செய்வோம் என அயர்லாந்து, ஸ்பெயின் போன்ற நாடுகள் அறிவித்துள்ளதால், அந்த நாடுகளின் வான்வெளியை தவிர்த்துள்ளார்.
இதனிடையே, ஐ.நா பொதுச் சபையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது உரையைத் தொடங்குவதற்கு முன்பு பெரும்பாலான நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மண்டபத்திலிருந்து வெளியேறினர்.
காசாவில் போரை முடிவுக்கு கொண்டுவரக் கோரும் உலகத் தலைவர்களின் கூட்டத்திலிருந்து இஸ்ரேலின் சமீபத்திய பொது எதிர்ப்பு இதுவாகும்.
இதற்கிடையில், இஸ்ரேல் மற்றும் அதன் ஆதரவு நாடுகளின் பிரதிநிதிகள் எழுந்து நின்று பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ஆதரவாக கைதட்டினர்.
No comments:
Post a Comment