போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்களை பள்ளிவாசல் மூலம் நல்லடக்கம் செய்ய அனுமதிக்கமாட்டோம் என பலாங்கொடை பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
அத்துடன் போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்களுடன் பலாங்கொடை பெரிய பள்ளிவாசல் எந்தவித தொடர்புகளையும் பேணமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலாங்கொடை பிரதேசத்தில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடுகின்ற நான்கு முஸ்லிம் வீடுகளுக்கு அப்பிரதேச உலமாக்கள் மற்றும் இளைஞர்கள் நேரடியாகச் சென்று இந்த அறிவித்தலை வழங்கியுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, பலாங்கொடை இளைஞர்களை பாதுகாக்க வேண்டியுள்ளது. இதனால் பலாங்கொடைக்கு போதைப் பொருட்களை கொண்டுவர வேண்டாம் என்ற கோரிக்கையும் பலாங்கொடை முஸ்லிம்களினால் போதைப் பொருள் வியாபாரிகளின் குடும்பத்தினரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
பலாங்கொடை முஸ்லிகள் மக்கள் குறித்த வீடுகளுக்கு சென்றபோது, போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் தலைமறைவாகியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டுச் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டியுள்ளது. இதனாலேயே வீடுகளுக்கு வந்து நேரடியாக விழிப்புணர்வுகளை மேற்கொள்கின்றோம் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை பலாங்கொடை பெரிய பள்ளிவாசலில் போதைப் பொருள் தொடர்பில் ஜும்ஆப் பிரசங்கம் இடம்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்தே இப்பிரதேசத்தில் போதைப் பொருள் வியாபாரத்தினை ஒழிக்க வேண்டும் என ஊர் மக்கள் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Vidivelli
No comments:
Post a Comment