தங்காலையில் மீட்கப்பட்ட “ஐஸ்” தயாரிக்க பயன்படுத்தப்படும் ஒரு தொகை இரசாயன பொருட்கள் - News View

About Us

About Us

Breaking

Monday, September 8, 2025

தங்காலையில் மீட்கப்பட்ட “ஐஸ்” தயாரிக்க பயன்படுத்தப்படும் ஒரு தொகை இரசாயன பொருட்கள்

தங்காலை, நெடோல்பிட்டிய பகுதியில் நேற்று (07) காலை ஐஸ் போதைப் பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு இரசாயனப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தங்காலை பொலிஸாருக்கு கிடைத்தத தகவலுக்கு அமைவாக நடோல்பிட்டியவில் உள்ள வெலிவென்ன குறுக்கு வீதியை ஒட்டிய பகுதியில் நேற்று காலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது இந்தப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இங்கு காணப்பட்ட இரசாயனப் பொருள்கள் மித்தேனி யாவில் உள்ள தலாவ பகுதியில கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப் பொருள் உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட இரசாயனப் பொருள்களைப் போன்று இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment