இலங்கை மத்திய வங்கியின் புள்ளி விபரங்களுக்கு இணங்க கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பில் ஈடுபட்டுள்ள இலங்கையர்கள் 680.8 மில்லியன் அமெரிக்கன் டொலர்களை நாட்டுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கிணங்க இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் அவர்கள் 5.116 பில்லியன் அமெரிக்கன் டொலர்களை நாட்டுக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இத்தொகை கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 19.3 சத வீத அதிகரிப்பாகும் என்றும் மத்திய வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் அரசாங்கத்துக்கு கிடைத்த வருமானம் 2 பில்லியன் அமெரிக்கன் டொலர்களைத் தாண்டியுள்ளதாகவும் மத்திய வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சுற்றுலாத்துறை மூலமான மொத்த வருமானம் 2.03 பில்லியன் அமெரிக்கத் டொலர்களாக பதிவாகியுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது கடந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் பதிவாகியுள்ள 1.88 பில்லியன் அமெரிக்கன் டொலர் சுற்றுலாத்துறை வருமானத்துடன் ஒப்பிடுகையில் 7.8 சதவீத அதிகரிப்பை பதிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment