மணல் ஏற்றிச் செல்ல கனரக வாகனங்களுக்கு தடை : அதிகரித்து வரும் விபத்துக்களால் புதிய நடைமுறை - News View

About Us

About Us

Breaking

Monday, September 8, 2025

மணல் ஏற்றிச் செல்ல கனரக வாகனங்களுக்கு தடை : அதிகரித்து வரும் விபத்துக்களால் புதிய நடைமுறை

பாடசாலை நேரங்களில் மணல் ஏற்றிச் செயல்லும் கனரக வாகன போக்குவரத்து இன்று (08) முதல் தடை செய்யப்படுவதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் தீபானி வீரக்கோன் தெரிவித்தார்.

பாடசாலை நாட்களில் காலை 6.30 மணி முதல் 7.45 மணி வரையிலும், முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலும் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட வேண்டும் என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.

அண்மையில் பாடசாலை போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த வேனுடன் மணல் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதற்கமைவாக, குறித்த காலப்பகுதியில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாகனங்கள் வீதியோரத்தில் முறையாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சகல பிரதேச செயலகங்களின் ஊடாக கடந்த 4 ஆம் திகதி முதல் இது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் தீபானி வீரக்கோன் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment