சஷீந்திர ராஜபக்ஷவிற்கு விளக்கமறியல் நீடிப்பு : பிணை தொடர்பில் அடுத்த நீதிமன்ற அமர்வில் தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Friday, September 19, 2025

சஷீந்திர ராஜபக்ஷவிற்கு விளக்கமறியல் நீடிப்பு : பிணை தொடர்பில் அடுத்த நீதிமன்ற அமர்வில் தீர்மானம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, கொழும்பு நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரிக்கும் கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று விடுமுறையில் உள்ளதால், வழக்கு அடுத்த திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் சஷீந்திர ராஜபக்ஷவின் பிணை மனு மீதான உத்தரவும் அன்றையதினம் அறிவிக்கப்பட உள்ளது.

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கடந்த மாதம் 06ஆம் திகதி கைது செய்யப்பட்டு, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment