பெக்கோ சமனின் மனைவிக்கு விளக்கமறியல் : பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு - News View

About Us

About Us

Breaking

Thursday, September 4, 2025

பெக்கோ சமனின் மனைவிக்கு விளக்கமறியல் : பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு

பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்சானி செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தோனேஷிய பொலிஸாரால் விடுவிக்கப்பட்டு இலங்கைக்கு வந்த பெக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தபோது குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த சந்தேகநபரை கொழும்பு தலைமை நீதவான் முன்பு ஆஜர்படுத்தியிருந்த நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து அவரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது கெஹெல்பத்தர பத்மே', 'கொமாண்டோ சலிந்த', 'பாணந்துறை நிலங்க' மற்றும் “பெக்கோ சமனின்” மனைவி உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பாதாள உலக கும்பலில் இருந்த “பெக்கோ சமன்” என்பவரின் மனைவி ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

இதனையடுத்து “கெஹெல்பத்தர பத்மே” உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி  இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “பெக்கோ சமன்” என்பவரின் மனைவி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment