ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது.
“ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்)” சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் இன்று (10) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இன்று மு.ப 11.30 மணி முதல் குறித்த சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதம் இடம்பெற்றதுடன், பி.ப 3.30 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் பதிவாகின.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம் 1986ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலமாகும்.
No comments:
Post a Comment