நேபாள ஜனாதிபதி ராம் சந்திர பௌடேல் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
நாடு முழுவதும் இடம்பெற்று வரும் கடுமையான மக்கள் எதிர்ப்புகள் மற்றும் அரசியல் நெருக்கடிகள் மத்தியில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஊழல், குடும்ப ஆட்சி, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் காரணமாக தலைநகர் கட்மண்டு உள்ளிட்ட பல நகரங்களில் கடந்த சில தினங்களாக மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டால் 19 பேர் உயிரிழந்த சம்பவம் மற்றும் சமூக வலைத்தளத் தடை ஆகியன காரணமாக மக்களின் அதிருப்தி மேலும் அதிகரித்து, போராட்டங்கள் வன்முறையாக மாறியது.
அந்நாட்டு பிரதமர் கே.பி. சர்மா ஒலி உள்ளிட்ட சில அமைச்சர்களின் வீடுகள், அந்நாட்டு பாராளுமன்றம் உள்ளிட்டவற்றில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீயிட்டிருந்தமையை சமூக வலைத்தள பதிவுகளில் காணக்கூடியதாக இருந்தது.
இந்நிலையில், இன்றையதினம் (09) பிரதமர் கே.பி. சர்மா ஒலி தமது பதவியை இராஜினாமா செய்த நிலையில், தற்போது நேபாள ஜனாதிபதி இராஜினாமா செய்திருப்பது அந்நாட்டின் எதிர்கால அரசியல் பாதையைப் பற்றிய பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
.jpg)
No comments:
Post a Comment